“மலேசிய நாட்டுப்புறப் பாடல் மரபின் தொடர்ச்சி விடுபட்டு விட்டது” – கோகுலராஜன்

மலேசியத் திரைத்துறையில் இயங்கி வருபவர் கோகுலராஜன். இளம் இயக்குநர், தொகுப்பாளர், நடிகர் எனும் பரிணாமங்களைக் கொண்டவர். இவர் இயக்கிய ‘Bird on the 27th floor’ எனும் குறும்படம் சீ ஷோர்ஸ் திரைப்பட விழாவில் (Seashores Film Festival)  திரையிடப்பட்டது. கோவிட் பெருந்தொற்றுக் காலக்கட்டத்தில் இயக்கிய ‘வைரஸ் மைரஸ்’ குறும்படம் குமான் குறும்படப் போட்டியிலும் வென்று…

அப்பாவுக்குச் சென்னை பிடிக்கவில்லை

அலுவலகம் முடிந்த பின் எல்டாம்ஸ் ரோட்டிலும் நுங்கம்பாக்கம் ஹைவே டிராஃபிக்கிலும் முக்கால் மணிநேரம் லோல்பட்டு, இதற்கு நடுவில் ஒன்வேயில் மேலே ஏறிவந்த ஒரு பைக்காரனைத் திட்டிவிட்டு ஒருவழியாக அண்ணாநகர் வந்துசேரும்போது ஏற்கெனவே ஆறு முப்பது ஆகியிருந்தது. குறுகலான மாடிப்படியில் ஏறினால் குளிரூட்டப்பட்ட ஹால். சிவில் சர்வீஸஸ் மெயின் தேர்வுக்கான கோச்சிங் வகுப்பில் சேர்ந்திருந்தேன். வரலாறு வகுப்பு.…

நாற்றம்

வெலிங்டன் விடுதியின் காப்பாளர் பங்களாவுக்குச் செல்லும் பாதையின் இருபுறமும் பனைமரங்கள் ஓங்கி வளர்ந்து நிற்கின்றன. அடர்ந்த பனைமரத் தூர்களின் அடியில் முற்றி உதிர்ந்த நுங்குகள் கிடக்கின்றன. வெட்டி இறக்கப்படாத நுங்கு குலையாகத் தெரித்து மட்டைகளின் இடையில் தொங்குகின்றன. பாதையில் சிதறிக்கிடக்கும் இரண்டு பெரிய நுங்குகளில் பளபளப்பு மங்கி மஞ்சள் நிறக்கோடுகள் விழுந்திருக்கின்றன. டேனியல் விஜயகுமாரின் அம்மா…

செல்சி நீலம் – சீன மனம் பேசும் கதைகள்

“மொழிபெயர்ப்பு இல்லையெனில், நான் என் சொந்த நூற்றாண்டின் எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பேன்” என கண்டாலே கால்வினோ கூறியதுதான் செல்சி நீலம் புத்தகத்தைப் படித்து முடித்த பிறகு எனக்குத் தோன்றிய முதல் சிந்தனை‌. வெளிநாட்டவர்களிடம் மலேசியாவின் கவர்ந்திழுக்கக் கூடிய பண்புகளை விவரிக்கச் சொன்னால், மூவின மக்களின் உணவும், கலாச்சார பாரம்பரியங்களும் அதில் முக்கிய காரணியாக அமையும். சூழல்…

அலையாட்டங்களின் விசித்திரங்கள்

செந்தில்குமார் நடராஜன் இலக்கிய ஆர்வலர். தேர்ந்த வாசகர். கும்பகோணத்தைச் சேர்ந்த செந்தில்குமார் பல ஆண்டுகளாக சிங்கப்பூர்வாசி. சிங்கப்பூரின் தங்கமுனை சிறுகதைப் போட்டியில் 2019ஆம் ஆண்டு முதல் பரிசும், 2017ஆம் ஆண்டு மூன்றாம் பரிசும் வென்றவர். ‘நீர்முள்’ இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. ஸீரோ டிகிரி, எழுத்து பதிப்பக வெளியீடு. பத்துச் சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது.…

சருகு

1 படுக்கை அருகே இருந்த மேசை மீது அலைபேசியை வைத்த சீனிச்சாமி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டார். நகங்கள் கட்டில் விளிம்பில் பலமாய் பதிந்திருக்க தொண்டை வழி இறங்கிய வியர்வை மயிரற்ற மார்பின் ஊடாக வழிந்தது. பழுப்பேறியிருந்த வேட்டியைத் தொடைகளுக்கிடையே ஒடுக்கிக்கொண்டு வாசல் பக்கம் பார்த்தார். வெயில் ஏறுவதற்கு வெகுநேரம் இருந்தது. முழுதாய் விடிந்திருக்காத இவ்வேளையில் செல்லப்பாவை…

முத்தத்திற்குப் பிறகு கடவுளானவன்

“எங்கே சென்றிருந்தாய் மகதலா? நாம் இரவுணவுக்குச் செல்ல வேண்டும். அங்கே சீடர்களும் நமக்காக காத்திருப்பார்கள்.” இந்த அழகான மாலை பொழுதில் எருசலேம் நகரமே பாஸ்கா திருவிழாவிற்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. எகிப்தில் அடிமைகளாயிருந்த இஸ்ரயேல் மக்களை மோசே வழியாக கடவுள் மீட்ட நாளையே பாஸ்கா திருவிழாவாகக் இஸ்ரயேல் மக்கள் கொண்டாடுகிறார்கள். இன்று இரவு எருசலேம் நகர மக்கள்…

கிள்ளான் காகம்

நீ கிள்ளானில் வசிக்கும் ஒரு காகம். இன்றும் நீ நடுக்கத்துடன் தான் எழுகிறாய். என்னதான் சூரியன் மெல்ல உதித்துக்கொண்டிருந்தாலும், வானம் இன்னும் இருண்டவண்ணமே இருக்கிறது. குச்சிகளாலான உன் கூட்டிலிருந்து எதிரே இருக்கும் திரு.ங்-ஙின் வீட்டை நீ எட்டிப் பார்க்கிறாய். நீ உன் கறுத்த இறக்கைகளை அசைக்க, உன்னுடன் வசிக்கும் சகோதரர்கள், உறவினர்கள், அண்டை மரத்துக் காக்கைகள்…

சைமனின் தந்தை

பள்ளியின் வாசல் திறந்தவுடன் மாணவர்கள் ஈசல் கூட்டம்போல ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டும் முந்திக்கொண்டும் அரக்கப் பரக்க வெளியே விரைந்தனர். கட்டொழுங்கோடு வரிசையாகப் புறப்படாமல், முடிச்சுக்களிலிருந்து அவிழ்த்துக்கொண்டது போன்று சிதறிக்கொண்டும் திட்டுத் திட்டாகவும், கூட்டமாய்ப் பேசிக்கொண்டும் கலைந்தும் மாணவர்கள் இரவு உணவுக்காக விரைந்துகொண்டிருந்தனர். மாலை வேளை. லா பிளாஞ்ச்சோட் அந்த ஊருக்குப் புதிதாய்க் குடியேறி இருக்கிறாள் என்பதை…

மறதி

“வேசி… நான் மட்டும் இப்பொழுது ஊரில் இருந்திருந்தால், நிச்சயமாக அவளை ஏதாவது செய்திருப்பேன்… வேசி… காமப்பசி எடுத்து அலைகின்றாள்…” என உடைந்த ஆங்கிலத்தில் துண்டுதுண்டாக அக்கினோ சொல்லிக் கொண்டிருந்தான். அவனருகில் சுவரைப் பற்றியவாறு கிழவர் நின்று கொண்டிருந்தார். “அடுத்ததாக, அவள் மீது வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்யலாமென இருக்கிறேன்… எனக்குச் செய்த துரோகத்துக்கும் மகனைச் சரியாகப்…

டாம் அண்ட் ஜெர்ரி

அந்த மொட்டை வால் பூனையைப் பிடித்து பொறித்து தின்ன வேண்டும். அதற்குச் சரியான திட்டமொன்றை வரைய வேண்டும். மஞ்சள் நிறமான அந்தப் பூனை எங்கள் தோட்டத்தில் ஒரு கோழிக்குஞ்சைக் கூட விட்டுவைத்ததில்லை. கலர் கோழிக்குஞ்சுகள், இறைச்சிக் கோழிக்குஞ்சுகளென பேதமின்றி தின்று விடுகிறது.  தோட்டம் முழுக்க எல்லா கோழிக்குஞ்சுப் பிரியர்களும் பயந்து நடுங்குவது அந்த மொட்டை வால்…

அரணென்றானவள்

1 2023ல் நித்யவனத்தில் நிகழ்ந்த குரு நித்யா காவிய முகாமில் நீலி இதழாசிரியரும், எழுத்தாளருமான ரம்யாவுக்குப் பெண்ணெழுத்து சார்ந்து ஓர்  அமர்விருந்தது. அதில் ரம்யாவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி “நீங்கள் பெண்ணெழுத்தை முதன்மையாக வைத்து பத்திரிகை தொடங்கியிருக்கிறீர்கள், அதற்கு ‘நீலி’ என்ற ரத்தம் குடித்துக் கொல்லும் நாட்டார் தெய்வத்தின் பெயரை வைக்க காரணம் என்ன?” என்பதாக…

லதா கவிதைகள்

புத்தகங்கள் எதையோ மறைக்கின்றன நூலக நகரம் என்றொரு பெயரும் இந்நாட்டுக்கு உண்டு வட்டாரத்துக்கு ஒரு வசதியான நூலகம் வண்ணப் படங்களும் காட்சிகளும் விளையாட்டுமாக புத்தகங்களோடு பிள்ளைகள் “இங்கு யாரும் இலக்கியம் வாசிப்பதில்லை” என்றார்  எழுத்தாளர் கினோக்குனியா புத்தகக்கடை மூன்றாவது கிளையைத் திறந்தது. “இந்நாட்டு மக்கள்  புதிதாக வரும் எதையும் வாங்குவார்கள்” என்றார் அவர். அவருக்கும் நூல்களை…

தமிழாசியா சந்திப்பு 21: மறக்கப்பட்ட முன்னோடிகள்

நூற்றாண்டு கடந்த தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஒரிரு கதைகளின் வாயிலாகவே நினைவுக்கூரப்படும் எழுத்தாளர்கள் பலர் உள்ளனர்.  அத்தகைய எழுத்தாளர்கள் குறைவான சிறுகதைகளே எழுதியிருந்தாலும் பங்களிப்பால் முக்கியமானவர்களாக மதிப்பீடப்படுகின்றனர்.  நவீனத் தமிழ்ச் சிறுகதை மரபுக்கு உரம் சேர்த்தவர்களாகவும் நினைவுக்கூரப்படுகின்றனர். தமிழ்ச் சிறுகதைகளின் சாரமான பகுதியை அறிந்துகொள்ளும் முயற்சியில் தவறவிடக்கூடாத முன்னோடி எழுத்தாளர்கள் சிலரின் கதைகள் குறித்தே கடந்த…

தமிழாசியா சந்திப்பு 22: எதிர்மறை உலகத்தின் ஒளி

தமிழாசியாவின் 22-வது சந்திப்பில் அ. மாதவன் அவரின் புனைவுலகத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் நான்கு சிறுகதைகளைக் கலந்துரையாடினோம். அ.மாதவன் 1970-களில் தொடங்கி கட்டுரை, சிறுகதை, நாவல் எனப் பல இலக்கிய வடிவங்களில் தனது படைப்புகளை வழங்கியுள்ளார். இவருடைய சிறுகதைகள் இயல்புவாதத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டிருப்பதால் இலட்சியங்களுக்கு அப்பாற்பட்டு மனித இயல்புகளான பசி, காமம், வன்மம் ஆகியவற்றில்…